தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி கணிதம் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பாக வங்கி துறைக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி கணிதம் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பாக வங்கி துறைக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வங்கித் துறையில் கணித மாணவர்கள் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் தொழில்வாய்ப்பு பாதைகளைப் புரிந்து கொள்ள வழிகாட்டும் நோக்கில், தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி கணிதம் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பாக கணித வழி வங்கித் துறைக்கான வழிகாட்டுதல் (“Charting a Banking Career: Mathematical Pathways ”) என்ற தலைப்பில் 25.10.2025 அன்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

கணிதத் துறையின் (2015–2020) பழைய மாணவரும், தற்போது யூனியன் வங்க் ஆஃப் இந்தியா, மதூர், கள்ளக்குறிச்சியில் உதவி மேலாளரும் கிளை துணைத் தலைவருமான ஹரிகிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் கல்வியிலிருந்து வங்கித் துறைக்கான தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, வங்கித் துறையில் கணிதத்தின் முக்கிய பங்கைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது.