தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் கருத்தரங்கம்
தூத்துக்குடி,வ. உ. சிதம்பரம்
கல்லூரி, வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் மேம்பட்ட பொருள் மற்றும் அதன் பயன்பாடு என்ற தலைப்பில் ஐசிஎஎம்எ 2025 என்ற சர்வதேச கருத்தரங்கம் 2025 டிசம்பர் 19 அன்று நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கில் ரஷ்யாவின் உரால் பெடரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் முத்துகிருஷ்ணன், பெங்களூரு சப்தகிரி என்பிஎஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அஸ்வதாமன், மற்றும் பன்னாரி அம்மன் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சுமார் 100 மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். துறைத் தலைவர் பொறுப்பில் உள்ள டாக்டர். சித்தார்த்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர்.வீரபாகு பாராட்டுரை வழங்கினார்.
இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வேதி மற்றும் ஒழுங்கமைப்பு செயலாளர் டாக்டர் ஜெசிக்கா பெர்னாண்டோ, துறை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டனர்.









