அரசுப் பள்ளிகளில் நாளை பள்ளி மேலாண்மை குழு ( SMC ) கூட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு ( SMC – School Management Committee )
கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை ( 29 – 08 – 2025 )நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் ( SMC ) 2024 ஆம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டன.
இதையடுத்து 2024 முதல் 2026 ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர் உறுப்பினர்களைக் கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டமானது கடந்த ஆண்டு முதல் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டின் முதல் மேலாண்மை குழு கூட்டம் கடந்த மாதம் ( ஜூலை ) 25ஆம் தேதி நடைபெற்றது.
மேலும் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை ( 29- 08 – 2025 ) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
திறன் இயக்கம்,போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, பள்ளி தூதுவர்கள், மணற்கேணிஸசெயலி, போக்குவரத்து வசதிகள், இல்லம் தேடி கல்வி, இடைநிற்றில் கணக்கெடுப்பு, கலைத் திருவிழா உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.












