தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

தூத்தூக்குடி தெற்கு புது தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 38 வது மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தேசியக்கொடி ஏற்றினார். தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

சட்ட உரிமை கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் மற்றும் மாநில துணை செயலாளர் பேச்சிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

விழாவில் மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டி ,கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேட போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் சட்ட உரிமை கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். மேலும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவில் சட்ட உரிமைக் கழகத்தின் உறுப்பினர்கள் அட்வகேட் சின்னத்தம்பி , ஸ்ரீராம் தலைமை அலுவலக செயலாளர் திவ்யா பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி, துணைத் தலைவர் மரியவல்லி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஆசியை ரத்னா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ரத்னா, விஜயலட்சுமி, ஜான்சி, ஜாய்ஸ், ஜான்சி ராணி, உஷா சாந்தினி, பவானி பத்மா மற்றும் சுகுணா (AI) ஆகியோர் செய்திருந்தனர்.