தூத்துக்குடி DMNS.டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 80 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது !

தூத்துக்குடி DMNS.டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 80 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது !

தூத்துக்குடி தாமோதர நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள DMNS. Dr.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

பள்ளிச் செயலாளர் மற்றும் தாளாளர் உமரிஷங்கர் நாடார் தேசியக் கொடி ஏற்றி தலைமையுரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியை செல்வி.ஸ்ரீ இந்துஜா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை உறுப்பினரும் பள்ளி நலக்குழு உறுப்பினருமான லிங்கசெல்வன் நாடார் மற்றும் சீனிவாசன் நாடார் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்கள்.

மாணவ – மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி ஆசிரியை சினி திவ்யா நன்றியுரையாற்றினார். விழாவில் ஆசிரியைகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியைகள் இனிகோ கர்டோசா மற்றும் கௌரி நித்யா ஆகியோர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாரகள்.

நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுபெற்றது. விழா முடிவில் கணேஷ் பேக்கரி விக்னேஷ் மற்றும் கணேஷ் கேக் வழங்கினார்கள்.