தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் :

  • தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் :

தூத்துக்குடி மாவட்டம் குடும்ப நலத்துறை சார்பாக உலக மக்கள் தொகை தினமானது தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் (தன்னாட்சி) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,
அமைச்சர் கீதாஜீவன்,துணை இயக்குநர் மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்பநலம், மருத்துவர் பொன் ரவி மற்றும் தூய மரியன்னை கல்லூரி செயலர் முனைவர். அருட்சகோதரி குழந்தை தெரஸ்,
முதல்வர் முனைவர். அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் முனைவர். அருட்சகோதரி எழிலரசி ஆகியோரின் முன்னிலையில் உறுதி மொழியோடு பேரணியும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவர்கள் பணியாளர்கள் பேராசிரியர்கள் மற்றும்
மாணவர்களும்
கலந்து கொண்டனர்.

அதன் பின் தூய மரியன்னை கல்லூரி நட்சத்திர அரங்கில் உலக மக்கள்தொகை தின விழாவின் விழிப்புணர்வு கருத்தரங்கம். மற்றும் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு 10.07.2025 அன்று நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளை சிறப்பு செய்தனர்.

முதல் பரிசு முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாறு மாணவி முத்துமதுமிதா,
இரண்டாம் பரிசு இளங்கலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் இந்துமதி ,
மூன்றாம் பரிசு இளங்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு லூர்து ராபியா ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு கருத்தரங்கில் முதல்வர் முனைவர். அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, மருத்துவர் பொன்ரவி, மருத்துவர் பிரிய தர்ஷினி, மருத்துவர் சுந்தர் லிங்கம் மூவரும் உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வினை குடும்ப நலச் செயலகம், தேசிய சேவை திட்டம் (NSS – யூனிட் எண் 66, 67, 129 and 130), இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) ஒருங்கிணைப்பாளர்களும், மற்றும் மாணவர்களும் இணைந்து செய்தனர்.