தூத்துக்குடியில் +2 மாணவ, மாணவியருக்கான “உன்னால் முடியும் தேர்வு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி :
வ. உ. சிதம்பரம் கல்லூரியில் நாளை 09.10.2025 நடைபெறுகிறது
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டுதல், மாணவர்கள் மேற்படிப்பு தேர்ந்தெடுப்பதில் உதவி, அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
மாணவர்களின் திறன்கள், ஆர்வம், மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப தொழில் மற்றும் உயர்கல்விக்கான தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல்.
பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்களில் உள்ள சவால்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

தன்னம்பிக்கை, நேர்மறையான மனப்பான்மை மற்றும் கடின உழைப்பு போன்ற வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.
நகரங்களில் உள்ள மாணவர்களைப் போலவே, கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வழிகாட்டுதலுக்கான அணுகலை உறுதி செய்தல்.
போன்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விதமாக 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரத்யேக உன்னால் முடியும் நிகழ்வு நாளை (09-10-2025 வியாழக்கிழமை ) காலை 9.30 மணிக்கு கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஏ. பி. சி. சொக்கலிங்கம் அவர்கள் தலைமை தாங்குகிறார். கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு முன்னிலை வகிக்கிறார்.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர். மதன் ஐபிஎஸ், மற்றும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ( பொ ) திரு.சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சியை கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறார்.












