தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கலலூரியில் விலங்கியல் துறை சார்பாக Internship Training Programe நடைபெற்றது!

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கலலூரியில் விலங்கியல் துறை சார்பாக Internship Training Programe நடைபெற்றது!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில், விலங்கியல் துறை சார்பாக “Techniques in Taxidermy” என்ற தலைப்பில் 15 நாட்கள் Internship training ப்ரோக்ராமம் ( உள்ளக பயிற்சித் திட்டம் ) 02.06.2025 முதல் 16.06.2025 வரை சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியில் 4 கல்லூரிகளிலிருந்து 12 முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்கள் இன்டர்ன்ஷிப் ப்ரோக்ராமில் ( உள்ளக பயிற்சித் திட்டம் ) பங்கேற்றனர். உயிரியல் மாதிரிகளை பாதுகாக்கும் மற்றும் காட்சிப்படுத்தும் நுட்பங்களில் நேரடி அனுபவத்தை மாணவர்கள் பெற்றனர். பயிற்சிக் காலத்தில் 150 க்கும் மேற்பட்ட உயிரியல் மாதிரிகள் பாதுகாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் உள்ளன.

இந்த பயிற்சி முகாமின் இறுதி நாளில் நடந்த valedictory function ல் பயிற்சியின் போது பாதுகாக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு கலந்து கொண்டு மாணவர்கள் காட்டிய ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் பாராட்டும் வகையில் உரையாற்றினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இம்முகாமை சிறப்பாக வழிநடத்தியதற்காக, விலங்கியல் துறைத் தலைவர் முனைவர். ரதிகா மற்றும் முனைவர். பாஸ்கரன் ஆகியோர்களுக்கும் கல்லூரி முதல்வர் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இதேபோல், விலங்கியல் துறையின் அனைத்து பேராசிரியர்களுக்கும், குறிப்பாக முனைவர். பெனசிர் பெகம், முனைவர். பார்த்திபன், முனைவர். கிருஷ்ணப்ரியா, டாக்டர் பிரியா மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கு அளித்த உறுதுணைக்கும் இந்த பயனுள்ள பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைத்து குழுவினருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பாராட்டுக்களையும்,நன்றியையும் தெரிவித்தார்.