கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS-236) சார்பில், புளியங்குளம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் விஜயன் ஆலோசனையின்படியும், முதல்வர் பிரபு தலைமையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் முறைகள், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், குடிநீர்த் தொட்டிகளை மூடி வைத்தல், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதையும், தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதன் மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும் என்பதையும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
“சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்போம்; டெங்கு இல்லாத கிராமத்தை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வையும் சேவை மனப்பான்மையையும் வளர்க்கும் வகையில் அமைந்தது.
கல்லூரி பேராசிரியர்கள், 50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கீதாராணி ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.












