தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி “லிவோரா 2026” கண்காட்சியில் தடை செய்யப்பட்ட சங்குகள் மற்றும் பவளப் பாறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு :
பள்ளி மாணவிகளுக்கு விளக்குகிறார் வனக்காப்பாளர் சுதாகர்!
தூத்துக்குடியில் பவள விழாவை கொண்டாடும் பாரம்பரிய மிக்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் “லிவோரா 2026″கண்காட்சி கடந்த 07 ம் தேதி தொடங்கி நேற்று 10 ம் தேதி 4 வது மற்றும் இறுதி நாளாக நடைபெற்று முடிந்தது..
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இக்கண்காட்சியில் காடுகள்,கடல், மற்றும் விலங்குகளின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதில் ஒருபகுதியாக கடல்களில் வாழும் ஒரு சில சங்குகளின் எண்ணிக்கை குறைந்து அழிவை நோக்கி செல்வதால் அந்த உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் அந்த வகையான சங்குகளுக்கு அரசு தடை விதித்ததுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சங்குகள் குறித்த விழிப்புணர்வை விளக்கங்களை வழங்க வன உயிரினச் சரகம் மூலம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது வ.உ.சிதம்பரம் கல்லூரி.
மேலும் பவளப் பாறைகளினால் சுனாமியின் வீரியம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அதனுடைய நன்மைகள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு அழகாக விளக்குகிறார் தூத்துக்குடி வன உயிரினச் சரக வனக்காப்பாளர் சுதாகர்.
வீடியோவை முழுமையாக பார்க்கவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇












