தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ரத்ததானம் முகாம் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ரத்ததானம் முகாம் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 17 – 08 – 2026 இன்று நடைபெற்ற ரத்ததான முகாமில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி இணைந்து ஏற்பாடு செய்தது. கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதிலும் ஒருங்கிணைப்பதிலும் முக்கியப் பங்காற்றின. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில் ரத்த சேகரிப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமை தாங்கினார். முனைவர்.ஸ்டீபன் பிச்சைமணி மற்றும் முனைவர்.முத்துசாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

நாட்டு நலப்பணித் திட்ட செயல்பாடுகளுக்காக முனைவர்.செல்வம், முனைவர்.கிருஷ்ணன் மற்றும் முனைவர். ஆரோக்கிய செல்வ சுந்தரி ஆகியோர் ஆதரவும் ஒருங்கிணைப்பும் வழங்கினர்.

வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிறுவனர் குலபதி ஏ.பி.சி. வீரபாகு நினைவாக இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்து.