தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி,என்.எல்.சி.தூத்துக்குடி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் !

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி,என்.எல்.சி.தூத்துக்குடி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் !

என்.எல்.சி.தூத்துக்குடி, தமிழ்நாடு பவர் லிமிடெட், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஏ. பி. சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் தூத்துக்குடி சவேரியார்புரம் ரோ.க.தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று 16 – 08 – 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ள எழுத்து உள்ளிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து 90 பேருக்கு கண் கண்ணாடிகள், 18 பேருக்கு மருந்துகள் கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் என். எல். சி.தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் கண்புரை சிகிச்சை பெற வந்தவர்களுக்கு என். எல். சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் 5 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இவை மட்டுமன்றி உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, தங்கும் வசதி, உணவு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இம்முகாமில் ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர்
கல்லூரியின் நாட்டு நலப் நலப்பணித்திட்டம் (அணி எண்கள் 47&57 ) மாணவிகள் 15 பேர், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்.ஸ்டெல்லா.பாக்கியம், முனைவர். புஷ்பகவல்லி, அரவிந்த் கண் மருத்துவமனை கந்தசாமி ஆகியோர் கலந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஏறத்தாழ 183 பேர் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.