1 முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தூத்துக்குடி நகர்ப்புற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது !
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தூத்துக்குடி நகர்ப்புற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்க விழா சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் ( 12 – 08 – 2026 ) புதன்கிழமை நடைபெற்றது.
கலைத் திருவிழா போட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி மற்றும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகன் வழிகாட்டுதலின்படி இளையோர் திறன் என்பதை மையக்கருத்தாக கொண்டு கவின் கலை, இசை, நாடகம் மற்றும் நடனம் ஆகிய வகைகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.
வட்டார அளவிலான நடைபெறும் கலைத் திருவிழா போட்டியினை சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விபாஸ்ரீ தலைமை ஏற்று தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு வனிதா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.












