தூத்துக்குடி ஶ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு “டிஜிட்டல் வலையில் சிக்காமல் பயணிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி ஶ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு “டிஜிட்டல் வலையில் சிக்காமல் பயணிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !

வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) ஒரு பகுதியாக, காமாட்சி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்காக “டிஜிட்டல் வலையில் சிக்காமல் பயணிப்போம்” (Navigating the Digital Trap) என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (7.8.2026) நடைபெற்றது.

கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.மார்ட்டினா ஜென்சி மாணவர்களிடையே உரையாற்றி, கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார்.

நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது மாணவர்களின் கவனச்சிதறல், தூக்கமின்மை, உடல்நலம், கல்வித் திறன் மற்றும் சமூக உறவுகள் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர் விளக்கினார்.

மேலும், டிஜிட்டல் சாதனங்களை பொறுப்புடனும்,சமநிலையுடனும் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், திரை நேரத்தை முறையாக நிர்வகிக்கவும், கற்றல் மற்றும் தனிமனித வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டனர்.

கலந்தாடல் முறையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி, தொழில்நுட்பத்தை அறிவுடனும், பொறுப்புடனும் பயன்படுத்துவதோடு, நிஜ உலகத்துடனான தொடர்பையும் பேணிக்கொள்வதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்தியது.