தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் விகாசா பள்ளி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி,மற்றும் விகாசா பள்ளி, ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு இடையே கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று (6.8.2026) கையெழுத்தானது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழில் வழிகாட்டுதல், சான்றிதழ் படிப்புகள் மற்றும் அறிவுப் பகிர்வு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இரு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய புதிய கல்விசார் பயணம் தொடங்கியுள்ளது.












