தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை சார்பில் டிஜிட்டல் கல்வியறிவு பயிலரங்கம் நடைபெற்றது:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை சார்பில் டிஜிட்டல் கல்வியறிவு பயிலரங்கம் நடைபெற்றது:

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் முதுநிலை மற்றும் விலங்கியல் ஆராய்ச்சித்துறை சார்பில், மாணவர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 29.06.2026 முதல் 13.07.2026 வரை 15 நாட்கள் டிஜிட்டல் கல்வியறிவு (Digital Literacy) பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கில், Microsoft Office பயன்பாடுகள் குறித்த செய்முறைப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிலரங்கின் நிறைவு விழா இன்று (14.07.2026) நடைபெற்றது.

இப்பயிலரங்கில் 39 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

விலங்கியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர்.ராதிகா, மாணவர்களை வாழ்த்தி, கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு அவசியமான டிஜிட்டல் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளுமாறு ஊக்கமளித்தார்.

இந்தப் பயிலரங்கின் மூலம் மாணவர்களின் டிஜிட்டல் கல்வியறிவு, Microsoft Office பயன்பாடுகளை திறம்பட பயன்படுத்தும் நம்பிக்கை, மற்றும் கல்வி, தொழில் வாய்ப்புகளுக்கான தயார்நிலை ஆகியவை மேம்பட்டன.