பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று மே 03 -2026 தொடக்கம்.
மே 3 முதல் ஜூன் 2 வரை www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் –
OC/BC/BCM/MBC@DNC ₹500, SC/SCA/ST ₹250.
அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் – ஜூன் 6 தேதி ஆகும்.
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை பொறியியல் (B.E./B.Tech) படிப்புகளில் சேர, இன்று மே 3, 2026 முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது.முக்கிய விவரங்கள்:விண்ணப்பப் பதிவு தொடக்கம்: மே 3, 2026.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2, 2026 ஆகும்.
இணையதளம்:
www.tneaonline.org.விண்ணப்பிக்கும் முறை:tneaonline.org இணையதளத்திற்கு செல்லவும்.பதிவு செய்தல் (Registration), கடவுச்சொல் உருவாக்குதல்.தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை நிரப்புதல்.விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்.விண்ணப்பத்தை சமர்ப்பித்து, நகல் எடுத்துக்கொள்ளுதல்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்த கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.












