கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டி :
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி :
மாநில போட்டிக்கு தகுதி
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டி கோவில்பட்டி, கிருஷ்ணா நகர், செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 25-08-2025 அன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. அரை இறுதி போட்டியில், கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், S.S. துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியும் மோதின. இதில் S.S. துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியை 6 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் நாகலாபுரம் அரசு கல்லூரி அணியை 5 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். முதலிடம் பிடித்த கே.ஆர். கல்லூரி அணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் Rs.54,000/- ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர், துணைதலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர். , உடற்கல்வி இயக்குனர், பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.












