இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு:
கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் மற்றும் பிற மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
அடுத்து 16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது .
இன்று 25 – 03 – 2026 புதன்கிழமை 3 வது தேர்வாக கணிதம் ( கணிதவியல்) பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
காலை 09.45 மணிக்கு தேர்வுக்கான கேள்வித் தாள்கள் கட்டுகள் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வு காலை 9.50 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.15 வரை நடைபெறும்.
கணிதம் பாடம் பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு கடினமாகவே இருக்கும்.இருந்தாலும் 16 ம் தேதி ஆங்கிலம் தேர்வு எழுதிய பின்னர் கணிதம் தேர்விற்கு 8 நாட்கள் இடைவெளி கிடைத்ததால் மாணவர்களை ஆசிரியர்கள் தேர்விற்காக தயார் படுத்தி இருப்பார்கள்.எனவே இன்றைய கணிதவியல் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு சற்று எளிதாகவே இருக்கும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதம் கடினமாக இருக்கிறது என்பதை பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதம் பாட குரூப்பில் கடந்த சில வருடங்களாக மாணவர்களின் சேர்க்கை ( முழுமையடையவில்லை ) குறைவாக இருப்பதை கண்டு புரிய முடியும்.
இன்று தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது…🌹🌹🌹🙏🙏🙏
ஆசிரியர்
“கல்விச் செய்திகள் “












