விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி நூற்றாண்டு விழா

  • விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி நூற்றாண்டு விழா

விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூரில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி நூற்றாண்டு விழாவை இன்று 20 – 3 – 2026 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு பள்ளியில் வைத்து கொண்டாடுகிறது.

விழாவிற்கு வரவேற்புரை வழங்குகிறார் தலைமை ஆசிரியர் ( பொறுப்பு ) கோவிந்தம்மாள்.

முன்னிலை வகிக்கிறார்கள் கலியவரதன்,உதவி கல்வி அலுவலர் ( ஆதிந ) விழுப்புரம். ஆதிசக்தி சிவகுமரி மன்னன்,தனி வட்டாட்சியர் ( ஆதிந )விழுப்புரம். வட்டாரக் கல்வி அலுவலர்கள் விக்கிரவாண்டி,சேகர் மற்றும் புஷ்பராணி.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி.

சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் ( வ.ஊ ) சையது முகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ ), மணிவண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் வி.சாத்தனூர், விமலா தமிழரசன், ஒன்றியக் கவுன்சிலர் வி.சாத்தனூர்.ஏகாம்பரம், விழுப்புரம் கல்வி கேந்திரா இயக்குநர்,சின்னப்பன்,ரியல் தொண்டு நிறுவனம் இயக்குநர் லாரன்ஸ்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் பானு , ஆசிரியர் பயிற்றுநர் உமாதேவி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் மேனாள் தலைமை ஆசிரியர்கள், மேனாள் உதவி ஆசிரியர்கள் மற்றும் மேனாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக ஜெய கல்விக்கரசி GMR, பிரபாவதி SMC, கலா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நன்றியுரை வழங்குகிறார் இடைநிலை ஆசிரியர் சாந்தி.

அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறார்கள், தலைமை ஆசிரியர்,உதவி ஆசிரியர்,பள்ளி மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், சத்துணவு மற்றும் காலை சிற்றுண்டி அமைப்பாளர்கள், கிராம முக்கியஸ்தர்கள்,ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் வி.சாத்தனூர்.