தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் கல்பகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரி, வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, கல்பகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 10.03.2026 அன்று கல்வி–தொழில் இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம், தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகும். இதன் மூலம் மாணவர்கள் நடைமுறை அறிவு, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வேதியியல் தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.












