தூத்துக்குடி ஆர்.சி.பெத்தனி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி ஆர்.சி.பெத்தனி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா :
மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி ஆர்.சி.பெத்தனி தொடக்கப் பள்ளியில் விளையாட்டு ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார் .

மேலும் விளையாட்டு விழாவின் தொடக்கமாக முக்கிய நினைவுச் சின்னமான ஒற்றுமை, நட்பு மற்றும் அமைதியின் அடையாளமாகத் திகழ்கின்ற விளையாட்டு தீபத்தை மேயர் ஏற்றி வைத்து உரை‌யாற்றினார்.

நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விளையாட்டு விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி ஜெஸ்ஸி ப்ரேமி மேரி , பள்ளியின் தலைமை ஆசிரியை அருட் சகோதரி ஜெனிட்டா ,ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.