தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு தேர்வு:
வ உ சி கல்வியில் கல்லூரி முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி வசந்தகுமாரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான “வளர்ந்த இந்தியா இளைஞர் பாராளுமன்றம் 20 26 ” என்ற மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
மாணவி வசந்தகுமாரியை கல்லூரி தலைவர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் அவர்கள், கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ.சண்முகம் அவர்கள், கல்லூரி முதல்வ முனைவர். கனகராஜ்,
பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினர்.












