2026 – 2027 ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ம் தேதி நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

2026 – 2027 ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ம் தேதி நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

நாடு முழுவதும் மே 3ஆம் தேதியன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

வரும் 2026-27 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு இன்று முதல் நீங்கள் விண்ணப்பிக்கலாம்., அதேநேரத்தில் வரும் மார்ச் 8ஆம் தேதி இரவு 9மணிவரை நீங்கள் நீட் தேர்வுககு விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும், ஆன்லைனில் மட்டுமே சமர்பிக்கவும் முடியும்.

விண்ணப்பத்தை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1700 கட்டணமாகும். கிரீமி லேயர் இல்லாத மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொது-EWS பிரிவினருக்கு ரூ.1600, எஸ்சி/எஸ்டி/மூன்றாம் பாலினத்தவர்/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

NEET UG 2026: கட்டணம் செலுத்தும் முறை:

இந்தியாவுக்கு வெளியிலும் நீட் தேர்வு நடத்தப்படும், அங்கு தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.9,500 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை கிரெடிட்/டெபிட் கார்ட், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். ஜி பே, போன் பே, பேடீஎம் போன்ற UPI மூலம் செலுத்துபவர்களின் பரிவர்த்தனை மார்ச் 8ஆம் தேதி இரவு 11:50 மணிக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருகக் வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தில் மாற்றம் செய்வதற்கு மார்ச் 10ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதிவரை காலக்கெடு கொடுக்கப்படும்.

2026ஆம் ஆண்டின் நீட் தேர்வு வரும் மே 3ஆம் தேதி நடைபெறும். நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை என மொத்தம் 3 மணிநேரம் நடைபெறும். தேர்வு எழுதும் மையம், அட்மிட் கார்ட், உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், பிற விவரங்களுக்கு, அப்டேட்களுக்கு nta.ac.in மற்றும் neet.nta.nic.in – இரண்டு அதிகாரப்பூர்வ தளங்களுடன் இணைந்திருங்கள்.

மேலும் விண்ணப்பிக்கும்போது, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண்களை கவனமாக உள்ளிடவும், அவைதான் தகவல் தொடர்புக்கு முக்கியமான ஒன்றாகும்.

NEET UG 2026: தேவையான ஆவணங்கள் :

ஒரு மாணவர் ஒரு விண்ணப்பத்தை மட்டும் சமர்பிக்க முடியும். விண்ணப்பிக்கும்போது மாணவர்களின் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்று, ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தேவையாகும். neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 011-40759000 அல்லது 011-69227700 தொலைபேசி எண் வாயிலாகவும் தொடர்புகொண்டு சந்தேகங்களையும் பூர்த்தி செய்யலாம்.