சோழபுரம் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் , ஆசிரியர் கழக கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் கல்லூரி நிர்வாக அனுமதியுடன் 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10
மணி அளவில் நடைபெற்றது.
துர்கா செல்வி விழாவின் துவக்க
உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் டாக்டர். பிரேமலதா பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை துவக்கி வைத்தார், மாணவர்களின் மதிப்பெண் சதவீதம்,வருகை பதிவேடு, வேலைவாய்ப்பு மற்றும் ஒழுங்குநடவடிக்கைகளை பற்றி பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.
ஐந்தாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த
மாணவிகளான பென்சியா EEE -98% செல்வராணி EEE – 95% ஆகிய
மாணவிகளை பாராட்டினார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தொழில்நுட்ப கல்வியின் செயல்பாடுகளையும் கல்வியின் முன்னேற்றத்தையும் அறிந்து
கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இவ்விழாவின் இறுதிப் பகுதியாக சரண்யா அ நன்றி உரை ஆற்றினார்.












