தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி:
அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அருள் சகோதரி பெர்னதெத் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் அருள் சகோதரி கிறிஸ்டி முன்னிலையில் நேற்று று தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவிகளுக்கு வழங்கினார்.
மாணவிகள் காலத்திற்கு ஏற்ப தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இன்றைய மாணவிகள் தான் 10 வருடங்கள் கழித்து நாளைய தலைவர்களாக பல்வேறு பொறுப்புகளில் அமர்வீர்கள்.
அரசின் முக்கியமான நோக்கம் அனைத்து மாணவிகளும் கண்டிப்பாக உங்கள் திறமைக்கேற்ப நல்ல ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும், நீங்கள் புத்தகம் வாங்குவதற்கும் அல்லது பேருந்தில் பயணம் செய்வதற்கும் உயர்கல்வி படிப்பதில் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக நமது தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டிருக்கிறார் என்பதை மாணவியர்களுக்கு தெரியப்படுத்தினார்.
இன்றைய தினத்தில் உலக ஈரநில பாதுகாப்பை முன்னிட்டு மாணவியர்கள் பசுமை படை சார்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை கொடுத்து மாணவியர்கள் பாடல் மூலமாகவும், பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனம் மூலமாக இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.
அமைச்சர் பள்ளியில் பணி புரியும் அனைத்து அருள் சகோதரி அவர்களையும், ஆசிரியர்களையும் , இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும் பாராட்டினார்..












