JEE – ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

JEE – ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

தேசிய தேர்வு முகமை ( NTA – National Testing Agency) நடத்தும், 2026-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ இரண்டாம் கட்டத் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்தவும் பிப்ரவரி 25 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இரண்டாம் கட்டத் தேர்வுகள் ஏப்ரல் 2 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

விண்ணப்பிக்க விரும்புவோர் examservices.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு:

JEE (Joint Entrance Examination) என்பது இந்தியாவில் உள்ள IIT, NIT மற்றும் பிற முன்னணி பொறியியல் கல்லூரிகளில் (B.E./B.Tech) சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.

இது JEE Main (முதன்மை) மற்றும் JEE Advanced (மேல்நிலை) என இரு நிலைகளைக் கொண்ட கணினி வழித் தேர்வு ஆகும்.

JEE Main தேர்வை NTA (தேசியத் தேர்வு முகமை) நடத்துகிறது.

JEE Main-ல் தேர்ச்சி பெறுபவர்கள், மிக உயரிய IIT-களில் சேர JEE Advanced எழுதத் தகுதி பெறுவார்கள்.

11 மற்றும் 12-ஆம் வகுப்பு இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), மற்றும் கணிதம் (Mathematics) பாடங்களை அடிப்படையாகக் கொண்டது.

IITs, NITs, IIITs மற்றும் இதர நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (CFTIs) பொறியியல் படிப்பில் சேரலாம்.

பொதுவாக 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அல்லது முடித்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.