மாணவர்கள் நேரம், காலத்தை சரியாக பின்பற்றினால் சாதனை படைக்கலாம்:
தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி போல் பேட்டை கீதா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 21ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிாியர் காளீஸ்வாி ஆண்டறிக்கையை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாிசுகளை வழங்கி பேசுகையில் எதிார்கால தலைமுறையினர் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்துள்ள பெற்றோர்களை முதலில் வரவேற்க கடமை பட்டுள்ளேன். போட்டி நிறைந்த உலகத்தில் கடந்த காலத்தில் ஆயிரம் போில் 100 பேர் தான் தோ்ச்சி பெறும் நிலை இருந்தது. இப்போது ஆயிரம்பேருமே படித்து தேர்ச்சி பெறும் நிலை உள்ளது.
ஓரு தொழில் நிறுவனத்தில் தன்னுடைய திறமைகளை வௌிப்படுத்துபவா்களை தான் அந்த நிறுவனம் தோ்ந்தெடுக்கும் அதே போல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றாால் மதிப்பெண்கள் நமக்கு முக்கியம் தான்.அதே சமயத்தில் கல்வி அறிவோடு நல்ல புத்தி சாலியாக இருப்பதற்கும் அறிவுத்திறனுடன் நல்லமுடிவை எடுப்பதற்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு கானும் வகையில் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பு என்பதை கடந்து கல்லூாி படிப்புக்கு செல்லும் முன் எந்த படிப்பை தோ்ந்தெடுத்து படிக்கலாம் என்று தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.
உங்களுடைய அம்மா ,அப்பா, ஆசிாியா்கள், மாமா, அத்தை ஆகியோரது நல்ல கருத்துக்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு பாடப்புத்தகங்களை முழுமையாக படிப்பது மட்டுமின்றி நல்ல பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள நாளிதழ்கள் படிக்க வேண்டும். எதிா்காலம் உங்கள் வசமாகும்.
பள்ளிக்கு எந்த நேரத்திற்கு சாியாக வரவேண்டும். என்று முடிவெடுத்து செல்லும் நிலைக்கு பெற்றோர்களும் துணை நிற்க வேண்டும்.நேரம் காலம் இவற்றையெல்லாம் சாியாக பின்பற்றினால் சாதனையாக உருவாக வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த ஆண்டு இருந்த நம் குழந்தைகள் இந்த ஆண்டு முன்னேறி சென்றது எல்லோருக்கும் கிடைத்திருக்கின்ற வாய்ப்பிற்கு மகிழ்ச்சி என்று பேசினாா்.
மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா பேசுகையில் குறைந்த வயதில் சில நோய்களினால் பலா் உயிாிழக்கும் நிலை வருகிறது அதை தவிர்க்கும் வகையில் ஏதாவது ஓரு விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஆரோக்கியம் முக்கியமானதாகும். எனது பள்ளி படிப்பின் போது எனக்கு மட்டுமின்றி என்னுடைய தம்பிக்கும் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.
போட்டி பொறாமை இல்லாமல் நம்மை நாமே வளர்த்து கொள்ள வேண்டும் தேவையற்ற தொழில்நுட்பத்தில் ஈடுபடாமல் சாதனையாளர்களாவதற்கு படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி பல தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாிசுகள் வழங்கினார்.
விழாவில் உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா சுதன், டாக்டர் கீர்த்தனா மகிழ்ஜான், ஜீனாஜீவன் உள்பட ஆசிாியர்கள், பெற்றோர்கள், மாணவ – மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் மகிழ் ஜான் நன்றி கூறினார்.












