மாணவ சமுதாயம், நுகர்வோர் விழிப்புணர்வு பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்: தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு

மாணவ சமுதாயம், நுகர்வோர் விழிப்புணர்வு பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்: தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு

கோவில்பட்டியில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் மற்றும் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி தேசிய உரிமைகள் தின விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.

முதல் பிரதியை எம்பவர் இந்தியா கொளரவ செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான சங்கர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பேசும்போது கூறியதாவது மாணவ சமுதாயம் நுகர்வோர் விழிப்புணர்வு பெற்றால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும்.பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம். நுகர்வோர் அனைவரும் விழிப்புடன் இருந்து சேவைகளைப் பெற வேண்டும்.மேலும் பொது மக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கூறினார்.

விழாவில் எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும்,தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான சங்கர் பேசும்போது

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ன் சிறப்பம்சங்கள் குறித்தும் நுகர்வோருக்கு பில்லே ஆயுதம் என்பதால் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பில்லை கேட்டு பெற வேண்டும். நாம் பெற்ற சேவைகளிலோ அல்லது பொருட்களின் தரத்திலோ ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நாட வேண்டும்.

நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும்,தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் உஷா மாணவர்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், விலை,தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதோடு பொருட்களையோ, சேவைகளையோ பெறும் போது அவசியம் ரசீது கேட்டு பெற வேண்டும் என கருத்துரையாற்றினார்.

விழாவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள்,உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர். அருண், கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி முதல்வர் முனைவர்.சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி முனைவர். வினாயஸ்ரீ செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.