தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இரத்ததான முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இரத்ததான முகாம்

தூத்துக்குடி மாவட்டம் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பாக தூய மரியன்னை கல்லூரியில் இரத்ததான முகாம்நடைபெற்றது.

இந்நிகழ்வானது செயலர்,முனைவர். அருட்சகோதரி,குழந்தை தெரஸ்
முதல்வர், முனைவர்.அருட்சகோதரி, ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர்,முனைவர்.அருட்சகோதரி, எழிலரசி சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.

தூய மரியன்னை கல்லூரி நட்சத்திர அரங்கில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சாந்தி இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள் பணியாளர்கள் பேராசிரியர்கள் மற்றும்
மாணவர்களும்
கலந்து கொண்டனர். மனித நேயத்தோடு பிறருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தோடு 25 மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.

அதன்பின் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்டம்(NSS ), இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) ஒருங்கிணைப்பாளர்களும், மற்றும்
மாணவர்களும் இணைந்து செய்திருந்தனர்.