நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம்

இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டை போல இந்தாண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் வழியாக புகார் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகார் அளிக்க புதிய இணையதளம்

இந்தாண்டு மே 4-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு மோசடிகள், முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் உள்ளதாக கூறும் சமூக வலைத்தள பக்கங்கள், அங்கீகரிக்கப்படாத இணையதளம், தனிநபர் மற்றும் தேசிய தேர்வு முகமை அல்லது அரசு அதிகாரிகள் போல் போலியாக அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் குறித்து இந்த இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
நீட் தேர்வு குறித்த புகார்களுக்கு https://neet.nta.nic.in/ மற்றும் https://www.nta.ac.in/ என்ற இணையதளங்களில் நேரடியாக, உரிய ஆதாரங்களுடன் அளிக்க வேண்டும். புகார்கள் முறையாக பரிசீலிக்கப்பட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEET UG 2025 அட்மிட் கார்டு வெளியீடு;
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கான Advance City Intimation சிலிப் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான அட்மிடு கார்டு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதனை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.












