தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் மக்கள் பகுப்பாய்வின் சக்தி டிஜிட்டல் யுகத்தில் மனிதவள திட்டத்தை மறுவமைத்தல் முதுகலை மனித வள மேலாண்மை துறையால் நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலையில் கான்ஃபரன்ஸ் ஹரலில் நடைபெற்ற கருத்தரங்கில் மொத்தம் 125 பேர் பங்கு பெற்று பயனடைந்தனர். இதில் 105 மாணவர்கள், 14 பணியாளர்கள் மற்றும் 6. ஆய்வாளர்கள் கல்லூரியிலிருந்து பங்கேற்றனர்.

அமர்வு துவக்கவிழாவுடன் தொடங்கி கல்லூரி கீதத்துடன் நிறைவுற்றது.
அமர்வு முதலாவதாக மக்கள் பகுப்பாய்வின் சக்தி டிஜிட்டல் யுகத்தில் மனிதவளத்திட்டத்தை மறுவமைத்தல் பேராசிரியர் டாக்டர். காசிநாதன் துணை இயக்குனர் தொலை மற்றும் ஆன்லைன் கல்வி மையம் மணிப்பால் பல்கலைக்கழகம் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் இந்தியா வழங்கினார்.

முதல் அமர்வில் நிறுவனங்களில் பணியாளர்களின் செயல் திறன் மற்றும் நடத்தை பற்றி பகுப்பாய்வு செய்ய மக்கள் பகுப்பாய்வு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து விளக்கமாக உரையாற்றப்பட்டது டாக்டர்.காசிநாதன் மனிதவள மேலாண்மையை மாற்றுவதில் மக்கள் பகுப்பாய்வின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் மற்றும் ஏ1 அடிப்படையிலான தளங்கள் போன்ற கருவிகள் எவ்வாறு சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

இக் கருத்தரங்கத்தில் மக்கள் பகுப்பாய்வு பணியாளர் தங்குதன்மை ஆட்கள் தேர்வு ஈடுபாடு செயல்திறன் மற்றும் பணியாளர் திட்டமிடல் ஆகிய துறைகளில் ஆற்றும் பங்கு விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் காணப்படும் சவால்கள் தொழில்நுட்ப இடைவெளி தரவு தரம் மற்றும் திறன்களின்பற்றாக்குறை என்பதையும் எடுத்துக் கூறப்பட்டன. அமர்வு கேள்வி பதில் தொடர்புடன் முடிவடைந்தது.

அமர்வு 2 மக்கள் பகுப்பாய்வின் வகைகள் மற்றும் பயன்பாடுகள் வழங்கியவர் டாக்டர். அண்ணி ரோஸ் நிர்மலா உதவி பேராசிரியர் தலைவர் மேலாண்மை ஆய்வுத்துறை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி திருநெல்வேலி தமிழ்நாடு.

இரண்டாம் அமர்வில் மக்கள் பகுப்பாய்வு நிறுவனங்களுக்கு தரவுத்தள அடிப்படையிலான அறிவார்ந்த மனிதவள முடிவுகளை எடுக்க எவ்வாறு உதவுகிறது என்பதை குறிப்பிட்டார். பணியாளர் தங்குதன்மை ஆட்கள் தேர்வு ஈடுபாடு செயல்திறன் மற்றும் பணியாளர் திட்டமிடல் கற்றல் மேம்பாடு ஆகிய துறைகளில் ஆற்றும் பங்கு விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் காணப்படும் சவால்கள் தொழில்நுட்ப இடைவெளி தரவு தரம் மற்றும் திறன்களின்பற்றாக்குறை என்பவையும் எடுத்துக் கூறப்பட்டன. அமர்வு கேள்வி பதில் தொடர்புடன் முடிவடைந்தது.