கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை : அமைச்சர் கோவி. செழியன் தகவல்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை : அமைச்சர் கோவி. செழியன் தகவல்

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உயர் கல்வியும் மருத்துவமும் தனது கண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலக அளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் “புதுமைப் பெண்”, “தமிழ் புதல்வன்” போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.

இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர் கல்வி சேர்க்கை பெரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இதனை அறிந்திருந்த முதலமைச்சர் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு தற்போது 15 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் உயர் கல்வி பயில பெருமளவில் மாணவர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் அதே போல் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீத இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10% கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் என்று உயர் கல்வி அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.