தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
79ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.08.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் மருத்துவர் மகிழ் ஜான்சந்தோக்ஷ் தேசிய கொடியை ஏற்றினார். அதன் தொடர்ச்சியாக கல்லூரி கலையரங்கில் 10.30 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வு மருத்துவர் மகிழ் ஜான்சந்தோக்ஷ் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவியர்களின் குழு நடனம் மற்றும் இந்தியாவின் சுதந்திரதின வரலாற்றினைப் பற்றி முத்துப்பிரியா ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி உரையாற்றினார். ஜெவினா ஜெபா வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை சுதந்திர வரலாற்றினை பற்றி உரையாற்றினார். இதனை தொடர்ந்து கலைநிகழ்வில் பங்குபெற்ற மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் தலைமையில் ‘வாங்க பேசலாம்’ என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறைசார்ந்த துறைத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இன்றைய இளைஞர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது, ‘பண்பாடு’ என்ற தலைப்பில் மாலையா கணேஷ் கணினி அறிவியல் துறைத் தலைவர் உரையாற்றினார். ‘தனிமனித ஒழுக்கம்’ என்ற தலைப்பில் மரிய ஆண்டனி மோனிகா, ஆங்கிலத் துறைத்தலைவர் உரையாற்றினார். ‘கல்வி’ என்ற தலைப்பில் தனலெட்சுமி, வணிக நிர்வாகத்துறை தலைவர் உரையாற்றினார். ‘சமூக பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்;வு’ என்ற தலைப்பில் முனைவர்.ஜெயவசந்தி, தமிழ்த்துறைத் தலைவர் உரையாற்றினார். ‘தொழில்நுட்ப அறிவு’ என்ற தலைப்பில் முனைவர்.இசக்கிமுத்து, வணிகவியல் துறைத்தலைவர் உரையாற்றினார். ‘உடல்நலம் பேணுதல்’ என்ற தலைப்பில் மாலதி, கணிதவியல் துறைத் தலைவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மருத்துவர் மகிழ் ஜான் சந்தோக்ஷ் , உடல்நலம் பேணுதல் குறித்து விளக்கவுரை அளித்தார். மற்றும் இந்நிகழ்வில் மாசில்லா மதியரசி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை வரவேற்புரை வழங்கினார்.

பிரின்ஸ் மேத்யூஸ் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் நன்றியுரை நல்கினார். ரேவநந்தினி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் அனைத்து துறைசார்ந்த பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர். முதல்வரின் ஆலோசனையின் படி, முனைவர் ஜெயவசந்தி, நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் மற்றும் மாலதி இளைஞர் செஞ்சிலுவை அலுவலர் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.