பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஏப்ரல் 10ஆம் தேதி தொடக்கம் : விடைத்தாள்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர் அறிவுறுத்தல்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஏப்ரல் 10ஆம் தேதி தொடக்கம் :
விடைத்தாள்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர் அறிவுறுத்தல்:

தமிழகம் முழுதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 11 புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ம் தேதி திங்கட்கிழமை வரை நடைபெற்றது

இதற்காக தமிழக முழுவதும் 4,219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 9,09002 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர்.இதில் 12,467 பள்ளிகளில் இருந்து 8,82,806 மாணவ – மாணவிகளும் ,தனித் தேர்வர்கள் 26,196 பேரும் உள்ளடங்குவர். மேலும் 395 சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் – 89 , அரசு உதவி பெறும் பள்ளிகள் 126 மற்றும் மெட்ரிக் பள்ளிகள் – 85 என மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 300 பள்ளிகளில் இருந்து 22,196 மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் 10 – 04 – 2026 ம் தேதி வெள்ளிக்கிழமை இத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடங்க இருக்கிறது.

தூத்துக்குடியில் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெற இருக்கிறது.

இது குறித்து
அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர் ( பணியாளர் )கே .பி.மகேஸ்வரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றரிக்கை மூலம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளர்.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

DGE – SSLC Valuation