தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 79வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
நாட்டின் 79வது சுதந்திர தினவிழா ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கிச் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார்.
வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் சங்கீதா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியரான முனைவர் மோனிக்கா ராம்ராஜ் தேசியக் கொடியேற்றிச் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் உரை மாணவியர்களின் நாட்டுப்பற்றைத் தூண்டும் வகையில் இருந்தது. ஒவ்வொரு துறை சார்ந்த பேராசிரியர்களும் சுதந்திர தினச்செய்தியை வழங்கினார்கள். சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரலாற்றுத்துறை சார்ந்த மாணவியர்களும் தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாணவியரும் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
சுதந்திர தின விழா தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வரலாற்றுத்துறை பேராசிரியர் பூர்ணிமா திலகம் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.













