தூத்துக்குடி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனை காட்சிப்படுத்த வாய்ப்பு : ஆகஸ்ட் – 2 ல் – TECHNO TALENTUM ’25 அறிவியல் கண்காட்சி

தூத்துக்குடி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனை காட்சிப்படுத்த வாய்ப்பு :
ஆகஸ்ட் – 2 ல் – TECHNO TALENTUM ’25 அறிவியல் கண்காட்சி

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 2 -ம் தேதி சனிக்கிழமை சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்தும் டெக்னோ டேலண்டம் ’25 ( TECHNO TALENTUN ’25 ) என்ற தலைப்பில் ரோபோடிக் மற்றும் அறிவியல் கண்காட்சி சண்முகபுரம் அபிநயா மஹாலில் வைத்து காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர், சாந்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றம் பற்றிய விழிப்புணர்வை வழங்க இருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தல், போதைக்கு அடிமையானவர்களை மீட்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறன்களை காட்சிப் படுத்தலாம்.

இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது படைப்பின் திறனை காட்சிப்படுத்தி மொத்தம் 62, 000 மதிப்புள்ள பரிசுகளை வென்றெடுக்கலாம்.

மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊக்கமளிக்கும், புகழ் பெற்ற பேச்சாளர் முனைவர். கார்திகா ராஜா உடன் கலந்துரையாட அழைக்கிறோம்..

தூத்துக்குடி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டுகிறோம்.

மேலும் இதுகுறித்த தகவலுக்கு
97914 39450
96000 09191
73390 31559

என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு :

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கால முன் பதிவு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நிகழ்ச்சியில் நேரடியாக பதிவு செய்யலாம்.
கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்படும்.