தூத்துக்குடி : கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திடம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில், 15.08.2025 அன்று காலை 11.00 மணிக்கு தருவைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆங்கிலத் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு, ஊராட்சி மக்களின் நலனுக்காக மனு வழங்கியதோடு, கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தருவைகுளம் ஊராட்சி செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் செரினா மார்க்ரெட் தலைமையின் கீழ், ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் முனைவர் ஹெர்மினா மற்றும் பேராசிரியர் மெல்பா ஷாரன் ஆகியோர் வழிநடத்தினர்.













