கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்.

இந்த நாளில் நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகம் கொடிகள் மற்றும் பலூன்களால் அலகரிக்கப்பட்டு இருந்தது. அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் கூடினர்.
கூட்டத்தினர் முன்னிலையில் தாளாளர் விஜயன் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நாட்டின் துணிச்சலான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல்வர் ஒரு உரை நிகழ்த்தினார்.

அதன் பிறகு கல்லூரி மாணவ மாணவியர்களால் மெல்லிசை தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டன. நடன மற்றும் பேச்சுப்போட்டிகள் போன்ற கலாச்சார நடவடிக்கைகள் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன தேசியகீதம் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.