கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக “ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி”

கோவில்பட்டி
கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
நுண்ணுயிரியல் துறை சார்பாக
“ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி”

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக உலக உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு பனிரெண்டமாண்டு உயிரியல் மற்றும் விவசாய பிரிவு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாலாட்டின்புதூர் கே. ஆர். சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தலைமை வகித்தார், துறைத் தலைவர் கருத்துரையாற்றி பயிற்சி பட்டறையின் நோக்கத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இத்துறை பேராசிரியை முனைவர். நாகஜோதி உயிரி எரிபொருள் முக்கியத்துவம் மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து இத்துறை சார்ந்த முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்விற்கான நெறிமுறைகள் மற்றும் பல்வேறு ஆய்வுமுறைகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.

இந்நிகழ்வை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழிகாட்டுதலின்படி துறை பேராசியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.