நவம்பர் 2 கல்லறை திருநாள் : ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற முன்னாள் முதல்வர் இபிஎஸ் வலியுறுத்தல்

நவம்பர் 2 கல்லறை திருநாள் :
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற முன்னாள் முதல்வர் இபிஎஸ் வலியுறுத்தல்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 2023 க்குப் பிறகு இப்போது நடத்தப்படும் இந்த தேர்வு தேர்வுகள் தாள் 1 க்கு நவம்பர் 1ஆம் தேதியும், தாள் 2 க்கு நவம்பர் 2 ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ம் தேதி புனிதர் திருநாள் ( All Saints Day ) நவம்பர் 2 ம் தேதி கல்லறைத் திருநாள்( All Souls Day )வருகிறது.

இது குறித்து முன்னாள் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளதாவது

உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.எனவேஅவர்களின் நிலை அறிந்து
உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு இபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.