தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் புதிய ஆய்வகம் : திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் புதிய ஆய்வகம் : திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி

சிஎஸ்ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதிவியேற்பு விழா மற்றும் மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு புதிய ஆய்வகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருமண்டல பள்ளிகளின் தாளாளர் முனைவர்.பிரபாகர், அருள்திரு.ஜேசன் தர்மராஜ், பள்ளியின் முதல்வர் ஜெகநாதன் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.