கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 வது பட்டமளிப்பு விழா

கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 வது பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருட்தந்தை முனைவர்.
இராஜதேவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்.பிரபு மற்றும் கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ரோஸரியோ முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இச்சிறப்புரையில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்கு இந்த படிப்பு ஒரு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தொன்போஸ்கோவின் கல்விமுறைகளை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். என சிறப்புறையாற்றினார்.

கல்லூரி பட்டமளிப்பு அறிக்கையினை கல்லூரி முதல்வர் வாசித்தார். இந்தவிழாவில் 200க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பட்டங்களை பெற்றனர்.

இவ்விழாவில் அருட்தந்தையர்கள் திவ்விய அலெக்சாண்டர், அருள்ராஜ், செல்வராஜ், ஆகியோர்கள் கலந்து கொண்டனர் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.