தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் “ஸ்பைருலினா மற்றும் காளான்”வளர்ப்பு பயிற்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் “ஸ்பைருலினா மற்றும் காளான்”வளர்ப்பு பயிற்சி

வ.உ.சிதம்பரம் கல்லூரியின் விலங்கியல் சார்பில் “ஸ்பைருலினா மற்றும் காளான் வளர்ப்பு முறைகள்” குறித்த இருநாள் தொழில் முனைவோர் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை சேவிதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உளவியல் துறையின் ஆய்வு பிரிவு உதவிப் பேராசிரியர் டாக்டர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்றைய (11.08.2025) அமர்வு “ஸ்பைருலினா வளர்ப்பு மற்றும் அறுவடை” என்ற தலைப்பில் நடைபெற்றது. ஸ்பைருலினா வளர்ப்பின் கோட்பாட்டுத் தகவல்களையும், நடைமுறை விளக்கங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

மாணவர்கள், தாங்களே செய்முறையில் ஈடுபட்டு, விதைச்சாறு (Inoculum) தயாரித்தல், கலாச்சார பராமரிப்பு, வளர்ச்சிக் குறியீடுகள், அறுவடை முறைகள் ஆகியவற்றைப் பயின்றனர்.

மொத்தம் 49 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இந்தப் பயிற்சியால் பயனடைந்தனர். இப்பயிற்சி வகுப்பினை விலங்கியல் துறைத் தலைவரும், பேராசிரியர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.