தூத்துக்குடியில் எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா
தூத்துக்குடியில் நூலக மனிதர்கள் சார்பில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பாராட்டு விழாவும் இலக்கிய விழாவும் தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை காமராஜர் கல்வி அரங்கத்தில் நடைபெற்றது.

ஜெயபால் ஆசிரியர் நூலக மனிதர்கள் அமைப்பின் பொறுப்பாளர் தலைமையில் ராம்குமார் ஆசிரியர் நூலக மனிதர்கள் அமைப்பின் பொறுப்பாளர் வரவேற்புரையாற்றினார்.பொன் மாரியப்பன் நூலக மனிதர்கள் பொறுப்பாளர் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் அம்பாள் முத்து மணி. அபிஸ் காபி நிறுவனர் மற்றும் ஆறுமுகசாமி சண்முக நாடார் மிட்டாய் கடை சாத்தூர். சாய்ராமன் மருத்துவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. ஞானராஜ் வட்டாட்சியர் குடிமைப் பொருள் வழங்கல், தூத்துக்குடி முகமது காசிம் மஸ்தான் , ஜேசன் தர்மராஜ், வினோத் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார் எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.இந்நிகழ்வில் திரளான புத்தக வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.












