கக்கன் – காமராஜர் கால் பதித்த பள்ளி :
இந்து அரிசன தொடக்கப் பள்ளி-தூத்துக்குடி

தூத்துக்குடி காந்திநகர், ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ளது இந்து அரசினர் தொடக்கப்பள்ளி.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினார் பாரதி அதனால் என்னவோ இந்த பள்ளியில் பாப்பாக்களின் (மாணவர்களின்) சேர்க்கை அதிகரிக்கலையோ என்ற எண்ணம் தோணுது.
இப் பள்ளியில் 52 மாணவர்கள் தான் கல்வி பயின்று வருகின்றனர். இது அரசு உதவி பெறும் பள்ளியாகும் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் கொடையாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மனமுவந்து வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
ஏனெனில் இந்த பள்ளிக்கு கரைபடியாத கைக்கு சொந்தக்காரரான ஐயா கக்கனும், கல்வி கடவுள், கர்மவீரர், கருப்பு காந்தி காமராஜர் அவர்களும் கால் பதித்த பள்ளியாகும்.
அவர்கள் கால் பதித்த இந்த பூமியை சிறப்பிப்பது நமது தூத்துக்குடி மக்களின் கடமையாகும்.எனவே அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ செல்வங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க உதவிட வேண்டும்.
வரலாறு :
பள்ளியின் புதிய கட்டிடத்தை 14.06.1958 அன்று அன்றைய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கரை படாத கைக்கு சொந்தக்காரர் கக்கன் திறந்து வைத்தார்.
அப்பொழுது பள்ளியின் நிர்வாகிகள் கக்கனிடம் தங்களது பள்ளிக்கு உரிய அங்கீகாரம் வழங்க கோரிக்கை வைத்தனர். நிர்வாகியின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்த கக்கன் நிர்வாகிகளின் கோரிக்கையை முதலமைச்சர் காமராஜர் கவனத்திற்கு கொண்டு சென்றார். காமராஜர் அந்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற தூத்துக்குடி இந்து தரிசன பள்ளிக்கு 08.07.1958 அன்று பள்ளிக்கு வந்து உரிய அங்கீகாரத்திற்கான ஆணையை வழங்கினார்.
கக்கனும், காமராஜர் அவர்களும் பள்ளிப் பார்வை பதிவேட்டில் அழகாக எழுதி கையெழுத்திட்ட பாதுகாப்பு பொக்கிஷம் இங்கே 👇👇👇👇👇👇















