TNEA – 2025 பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.39 லட்சம் அதிகமான பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுளது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் 128 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 9 பேரும், விளையாட்டு பிரிவில் 356 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொது கலந்தாய்வு
பொது பிரிவினருக்கான சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொது கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வு ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்தாண்டு 40,645 சீட்டுகள் அதிகம் :
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3,02,374 ஆகும். இவர்களில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,50,298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 40,645 கூடுதலாகும்.
7.5% இட ஒதுக்கீடு :
அதேபோல இந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் எண்ணிக்கை 2,41,641 ஆக உள்ளது. இது சென்ற ஆண்டைவிட 41,773 கூடுதலாகும். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 15,149 கூடுதலாகும்.












