தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் யோகா விழிப்புணர்வு மற்றும் செய்முறை நிகழ்வை யோகா மாஸ்டர் சுந்தரி நிகழ்த்திக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் மரிய கீதா தலைமை வகித்தார். நிகழ்வில் யோகா மாஸ்டருக்கு கலை சிற்பி விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கமணி ஆலோசனையின் பேரில் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.