நிசார் செயற்கைக்கோள் ஜீலை 14 ல் விண்ணில் ஏவ திட்டம் :
இஸ்ரோ தகவல்
பூமியை கண்காணித்து தகவல்களை சேகரிப்பதற்காக நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடார் செயற்கைக் கோள் அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவானதாகும்.
இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரி ஹோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நிஷார் செயற்கை கௌள் முழுமையான சோதனையை முடித்து கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஜி.எஸ். எல் வி மார்க் – 2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு அடுத்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் ஏக இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 747 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசை வான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
இந்த நிசார் செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை மிகத் துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. மேலும் பனிப்பாறைகள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும்.
அத்துடன் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும் அவற்றின் தாக்கத்தை குறைக்கவும் உதவும். மேலும் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை வளங்களை நிலையாக நிர்வகிக்க உதவி செய்கிறது.
இதன் இடதுபுறம் நோக்கிய கருவிகள் அண்டார்டிக் பகுதிகள் உள்ள “கிரையோஸ்பியர்” என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், பனி மலைகள், பணி முடியப் பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
மேம்பட்ட ரேடார் இமேஜிங்கை பயன்படுத்தி பூமியின் நிலம் மற்றும் பணி நிறைகளின் உயரத்தை ஒரு மாதத்திற்கு 4 முதல் 6 முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் திறன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா வந்த போது இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து நிசார் செயற்கைக்கோளை நிறுவும் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்தனர்.
நிசார் செயற்கை கோளை தயாரிக்க சுமார் ரூ 1805 கோடி செலவானது. 2800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் 6500 வாட்ஸ் சக்தி திறனை கொண்டுள்ளது












