தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி :
அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.06.2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு. கீதா ஜீவன் கலந்து கொண்டார். அவரது தொடக்கவுரையில் மாணவர்கள் தங்களுடைய அறிவினை நாள்தோறும் பட்டை தீட்டி கொள்ள முன்வரவேண்டும். நல்லொழுக்கங்களையும் கீழ்படிதலையும் கற்றுக் கொண்டு, முன் மாதிரி மாணவர்களாக திகழ வேண்டும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து சமுதாயத்தில் சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும். கல்லூரியில் படிக்கும் போதே நல்ல நண்பர்களை தேர்வு செய்து தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்து, எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல விருட்சங்களாக திகழ வேண்டும் என்றுரைத்தார்.

TANSCHE பரிந்துரையின்படி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர்களின் ஆறாவது பருவத்திற்கான, கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் எழுதிய ELT & Computer Assisted Language Learning என்ற பாடப்புத்தகத்தை, சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பெற்றுக் கொண்டார்.

கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் சுதன் கீலர் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் கல்லூரி பற்றியும் கல்லூரியின் பாடப்பிரிவுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் சுதா சுதன் வாழ்த்துரை வழங்கினார்.தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
முனைவர். ஜெயவசந்தி , கல்லூரியில் பின்பற்றப்படும் வருகைப்பதிவு குறித்து எடுத்துரைத்தார்.கணிதத்துறைத் தலைவர் மாலதி அகமதிப்பீட்டுத் தேர்வு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர். பேச்சிமுத்து கல்லூரியின் ஒழுங்கு விதிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

பெற்றோர் சந்திப்பில், கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் கல்லூரியில் பின்பற்றப்படும் கல்லூரி கட்டளைத் தொகை பற்றியும், ஒழுக்க நெறிகள் பற்றியும் மாணவர்களின் எதிர்கால நலன் குறித்தும், விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மாண்புமிகு. கீதா ஜீவன் தலைமையிலும், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சுதன் கீலர் மற்றும் சுதா சுதன் முன்னிலையில் நடைபெற்றது.

ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ரேவநந்தினி, வரவேற்புரை வழங்கினார். ஆங்கிலத் துறை பேராசிரியர் பிரின்ஸ் மேத்தேயூஸ் நன்றியுரை நல்கினார். ஆங்கிலத்துறைத் தலைவர் மரிய ஆண்டனி மோனிகா, இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்படி, கணிதத்துறைத் தலைவர் மாலதி மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ஜெயவசந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் முதலாமாண்டு மாணவ மாணவியர்கள் 80 பேர் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். துறைத் தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.